< Back
தேசிய செய்திகள்
கல்லூாி மாணவியை கர்ப்பமாக்கிய சமையல்காரர் கைது
தேசிய செய்திகள்

கல்லூாி மாணவியை கர்ப்பமாக்கிய சமையல்காரர் கைது

தினத்தந்தி
|
11 Aug 2022 8:25 PM IST

தீர்த்தஹள்ளி அருகே கல்லூரி மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவமொக்கா;

கல்லூரி மாணவி

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர், அதேப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி மாணவியின் பக்கத்து வீட்டில் முரளிதர் பட் என்பவர் வசித்து வருகிறார். சமையல்காரரான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

கல்லூரி மாணவியின் வீட்டில் டிவி. இல்லாத காரணத்தால் அவர் அருகே உள்ள முரளிதர் பட்டின் வீட்டிற்கு அடிக்கடி சென்று டி.வி. பார்த்து வந்துள்ளார். இதனால் முரளிதர் பட், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். மேலும் நடந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறினால் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் பயந்துபோன மாணவி, தான் கற்பழிக்கப்பட்டதை பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட முரளிதர் பட், மாணவியை மிரட்டி வீட்டிற்கு அடிக்கடி வரவழைத்து தொடர்ந்து கற்பழித்துள்ளார்.

கர்ப்பம்

இதற்கிடையே கல்லூரி மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர், மகளை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டா், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் நடந்த விஷயத்தை கேட்டனர். அப்போது மாணவி, பெற்றோரிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளிதர் பட் கற்பழித்து கர்ப்பமாக்கியதாக கதறி அழுதபடி கூறினாள்.

கைது

இதையடுத்து மாணவியின் பெற்றோர், தீர்த்தஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் முரளிதர் பட்டை கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கர்ப்பமான மாணவியை மீட்டு மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்