< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்த மாணவர், பிரதமர் பற்றி சர்ச்சை பதிவு; முடிந்தால் பிடித்து பாருங்கள்.... என போலீசுக்கு சவால்
தேசிய செய்திகள்

இளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்த மாணவர், பிரதமர் பற்றி சர்ச்சை பதிவு; முடிந்தால் பிடித்து பாருங்கள்.... என போலீசுக்கு சவால்

தினத்தந்தி
|
6 Aug 2023 12:15 AM IST

இளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்த மாணவர், பிரதமர் மோடி பற்றி சர்ச்சை பதிவிட்டதுடன், முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என போலீசாருக்கு சவால் விட்டுள்ளார்.

தார்வார்:

தார்வார் மாவட்டம் உப்பள்ளி வித்யாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவர் படித்து வருகிறார். அவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடன் படிக்கும் இந்து மாணவிகள் மற்றும் பெண்களின் ஆபாச படங்களை பதிவிட்டு வந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மற்றும் பெண்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் வித்யாநகர் போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் மற்றும் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர் ெவளியிட்டு வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தபோது, அதில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். அதாவது, பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் திப்பு சுல்தானை வணங்குவது போன்றும் புகைப்படங்களை சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துக்கு பதிலாக திப்பு சுல்தான் படத்தை வைத்து எடிட் செய்தும் சமூக வலைதளங்களில் ெவளியிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். ஆனாலும் அதற்குள் அந்த மாணவர் தலைமறைவாகி விட்டார். முன்னதாக அவர், முடிந்தால் தன்னை பிடிக்கும்படி போலீசாருக்கு சவால் விட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த மாணவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்