< Back
தேசிய செய்திகள்
புதிதாக பதவியேற்ற மராட்டிய மந்திரியை வரவேற்க பள்ளி மாணவர்கள் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சர்ச்சை
தேசிய செய்திகள்

புதிதாக பதவியேற்ற மராட்டிய மந்திரியை வரவேற்க பள்ளி மாணவர்கள் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சர்ச்சை

தினத்தந்தி
|
8 July 2023 7:04 PM IST

மந்திரியை வரவேற்பதற்காக பள்ளி மாணவர்களை சாலையோரம் நீண்ட நேரம் வெயிலில் அமரவைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் புதிய மந்திரியாக பதவியேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அணில் பைதாஸ் பட்டேல், தனது சொந்த ஊரான ஜல்கான் மாவட்டம் அமால்னர் பகுதிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக பள்ளி மாணவ, மாணவிகளை சாலையோரம் வெயிலில் அமரவைத்துள்ளனர்.

நீண்ட தாமதத்திற்குப் பிறகு வந்த மந்திரியை தரையில் அமர்ந்திருந்த மாணவர்கள் எழுந்து சல்யூட் அடித்து வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், மந்திரியை வரவேற்பதற்காக பள்ளி மாணவர்களை சாலையோரம் நீண்ட நேரம் வெயிலில் அமரவைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்