< Back
தேசிய செய்திகள்
பிரதமர் பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பிரதமர் பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
14 March 2024 12:31 AM IST

அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி நாடாளுமன்றம் தெரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புதுடெல்லி,

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த 9-ந் தேதி சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, பிரதமர் மோடியை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ வைரல் ஆகி உள்ளது.

இதனை பா.ஜனதா தலைவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் வசிக்கும் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சத்யா ரஞ்சன் ஸ்வைன், இந்த சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி நாடாளுமன்றம் தெரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் தா.மோ. அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்