< Back
தேசிய செய்திகள்
கே.எச்.முனியப்பா-ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல்
தேசிய செய்திகள்

கே.எச்.முனியப்பா-ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல்

தினத்தந்தி
|
7 Dec 2022 3:31 AM IST

கோலார் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எச்.முனியப்பா - ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எச்.முனியப்பா - ரமேஷ்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலோசனை கூட்டம்

கோலார் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பாவின் ஆதரவாளர்கள் எழுந்து, முன்னாள் சபாநாகயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு கூடியிருந்த முன்னாள் சபாநாகயர் ரமேஷ்குமாரின் ஆதரவாளர்கள் கே.எச்.முனியப்பாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதனால் இரு கோஷ்டியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதுடன் ஒருவரையொருவர் பலமாக தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

கோஷம் எழுப்பினர்

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு கூடியிருந்த சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த கே.எச்.முனியப்பாவின் ஆதரவாளர்கள் கோஷமிட்டவர்களை பலமாக தாக்க முற்பட்டனர். அத்துடன் சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால் இங்குள்ள பிரச்சினையை முதலில் சரி செய்யவேண்டும், அதுவரை அவரை கோலார் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது கோலார் சட்டசபை தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்திருந்த சுதர்சன் அங்கு வந்தார். அவர் அனைவரையும் சமாதனம் செய்தார்.

கட்சி மேலிடம்

மேலும் கட்சி மேலிடம் யாருக்கு டிக்கெட் கொடுக்கிறதோ? அவருக்கு நாம் அனைவருவம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். அதன்பின்னர் கோஷ்டி மோதல் ஒரு வகையாக முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்