சிக்கமகளூருவில் வங்கிக்கடன் பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம்
|சிக்கமகளூருவில் பொதுமக்கள் பயனடையும் வகையில் வங்கிக்கடன் பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது .
சிக்கமகளூரு;
சிக்கமகளூருவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடையும் வகையில் வங்கிக்கடன் பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கெம்பனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் ரமேஷ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் பொதுத்துறை வங்கிகள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டு, விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவது குறித்தும், கடனை திருப்பி செலுத்தும் கால அவகாசம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் வழக்கப்பட்டது.
இதில் பொதுமக்களும் கலந்துகொண்டு வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்கள் பெறுவது பற்றி கேட்டறிந்தனர். வங்கி அதிகாரிகள் அதற்கான அறிவுரைகளையும் வழங்கினர்.இந்த கூட்டத்தில் கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:-
சிக்கமகளூருவில் ஒருங்கிணைந்த வங்கிக்கடன் குறித்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் வங்கி அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றி கடன்களை பெற்று பயனடைய வேண்டும்.
குறைந்த வட்டிக்கு கடன்களை பெற்று வியாபாரம் போன்ற சுயதொழில்கள் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.