தசரா விழா ஒளிபரப்பு உரிமம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
|மைசூருவில் தசரா விழா ஒளிபரப்பு உரிமம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கலெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கி நடத்தினாா்.
மைசூரு
மைசூரு தசரா விழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மைசூரு லலிதாமஹால் பேலசில் தசரா விழாவையொட்டி தொழில் அதிபர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டு தசரா விழாவிற்கு தொழில் அதிபர்கள் விளம்பரம் தாரர்களாக இருந்து வருகிறார்கள். அதுபோல் இந்த ஆண்டும் தொழில் அதிபர்கள் விளம்பரம் தாரர்களாக இருக்க அழைப்பு விடுக்கப்பட்டு்ள்ளது.
விளம்பரதாரர்கள் தசரா டைட்டில், பிளாட்டினம், சில்வர் என வகைப்படுத்தப்பட்டு்ள்ளனர். இந்தநிலையில் டைட்டில் பான்சருக்கு 3 கோடி ரூபாய், பிளாட்டினம் ஸ்பான்சருக்கு 1 கோடி ரூபாய், கோல்ட் ஸ்பான்சருக்கு ரூ.50 லட்சம், சில்வர் ஸ்பான்சருக்கு ரூ. 25 லட்சம், தசரா நிகழ்ச்சி பான்சர்களுக்கு ரூ. 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.