< Back
தேசிய செய்திகள்
அரசியலமைப்பு சட்டம் ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் கருவியாகும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

'அரசியலமைப்பு சட்டம் ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் கருவியாகும்' - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

தினத்தந்தி
|
8 Aug 2024 12:06 AM GMT

அரசியலமைப்பு சட்டம் ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் கருவி என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மாணவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் அநீதிகளின் அனைத்து அம்சங்களையும் கண்டறிய வேண்டும். அரசியலமைப்பு சட்டம் ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்த கருவியாகும். வெளிப்படையான அல்லது கண்ணுக்கு தெரியாத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான பாதுகாப்பு கட்டமைப்பை அரசியலமைப்பு சட்டம் உருவாக்குகிறது.

அரசியலமைப்பு சட்டம் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையிலான உறவை ஒழுங்குபடுத்துகிறது. நமது சமூக கட்டமைப்பின் மதிப்புகளை நிலைநிறுத்துகிறது. அரசியலமைப்பு சட்டம் நமது ஜனநாயகத்திற்கான உறுதியான அடித்தளமாகும். அதே சமயம் அது நெகிழ்வான தன்மையை உடையது."

இவ்வாறு சந்திரசூட் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்