< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை புதுப்பொலிவு பெற செய்ய சதி திட்டம்; 10 முன்னாள் பயங்கரவாதிகள் கைது
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை புதுப்பொலிவு பெற செய்ய சதி திட்டம்; 10 முன்னாள் பயங்கரவாதிகள் கைது

தினத்தந்தி
|
11 July 2023 1:07 AM GMT

காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை மீண்டும் இயக்குவதற்கான சதி திட்டமிட்ட 10 முன்னாள் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜே.கே.எல்.எப். மற்றும் ஹுரியத் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அந்த அமைப்புகளை மீண்டும் புதுப்பொலிவு பெற செய்ய சிலர் சதி திட்டம் தீட்டி வந்து உள்ளனர்.

இதுபற்றி போலீசாருக்கு உளவு தகவல் தெரிய வந்து உள்ளது. தொடர்ந்து அவர்கள் அதிரடி விசாரணை நடத்தி, இதனுடன் தொடர்புடைய 10 முன்னாள் பயங்கரவாதிகளை காஷ்மீர் போலீசார் கைது செய்து உள்ளனர்.

அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த நபர்களின் உத்தரவின் பேரில் இந்த அமைப்புகளை மீண்டும் இயங்க செய்ய திட்டமிட்டு உள்ளனர். வெளிநாட்டை அடிப்படையாக கொண்டு செயல்பட கூடிய அமைப்புகளுடன் அவர்கள் தொடர்பில் இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதனை அடுத்து, கொதிபாக் காவல் நிலையத்தில், உபா சட்டத்தின் பிரிவு 10, 13 மற்றும் பிரிவு 121 ஏ ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சிலர் கைது செய்யப்பட கூடும் என்று ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்