< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!

தினத்தந்தி
|
9 Oct 2023 2:29 AM GMT

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன காா்கே தலைமையில் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் செயற்குழுவில் 39 உறுப்பினா்கள், 32 நிரந்தர அழைப்பாளா்கள், 13 சிறப்பு அழைப்பாளா்கள் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன காா்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலவரம், 5 மாநில சட்டப்பேரைவை தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்