< Back
தேசிய செய்திகள்
உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து பேனர்
தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து பேனர்

தினத்தந்தி
|
21 Feb 2024 10:45 AM IST

கான்பூர் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள கண்டகர் கிராசிங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.

கான்பூர்:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில், இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

யாத்திரையின் 38-வது நாளான இன்று உன்னாவ் நகரில் இருந்து புறப்பட்ட அவர் கான்பூர் நோக்கி வந்துகொண்டிருக்கிறார். கான்பூர் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள கண்டகர் கிராசிங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

ராகுல் காந்தியை வரவேற்க கான்பூரில் கட்சி நிர்வாகிகள் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளனர். சாலையின் இருபுறங்களிலும் வரவேற்பு பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை அர்ஜுனனாகவும் சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்