< Back
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் 3ல் 2 பங்கு இடங்களில் காங்கிரஸ் வெல்லும் - டி.கே.சிவக்குமார் உறுதி
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 3ல் 2 பங்கு இடங்களில் காங்கிரஸ் வெல்லும் - டி.கே.சிவக்குமார் உறுதி

தினத்தந்தி
|
2 Jun 2024 9:33 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வரும் 4ம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகவுள்ள நிலையில், நேற்று கருத்துக் கணிப்பு வெளியானது. இதில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என தகவல் வெளியானது.

இந்த சூழலில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியதாவது;

"கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம் என உறுதியாக இருந்தேன். 135ல் வெற்றி பெற்றோம். அதே போல இப்போதும் சொல்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும்." இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்