< Back
தேசிய செய்திகள்
ஆட்சி அதிகாரத்திற்காக பயங்கரவாதிகளுடன் கூட காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்; பா.ஜ.க. குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

ஆட்சி அதிகாரத்திற்காக பயங்கரவாதிகளுடன் கூட காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்; பா.ஜ.க. குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
10 July 2022 3:44 AM GMT

ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்றால் பயங்கரவாதிகளுடன் கூட காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,



டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, நாட்டின் 22 இடங்களில் பயங்கரவாதம் பற்றி காங்கிரஸ் கட்சி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த உள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் ஒரு விசயம். காங்கிரஸ் பயங்கரவாதத்துடன் துணை நின்றது என கூறினால் அது மிகையாகாது.

நாட்டில் எங்கெல்லாம் பயங்கரவாத செயல்கள் நடைபெறுகிறதோ, திருப்திப்படுத்தும் அரசியலால், காங்கிரசானது பயங்கரவாதிகளையும் மற்றும் பயங்கரவாதத்தினையும் ஆதரித்தே வந்துள்ளது.

பட்லா ஹவுஸ் என்கவுண்ட்டருக்கு பின்பு சோனியா காந்தியால் 3 நாட்களாக இரவில் தூங்க முடியவில்லை என்றும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார் எனவும் சல்மான் குர்ஷித்தே கூறினார். ஏன் சோனியா அழ வேண்டும்? பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்காகவா? என பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரசுக்கும், ஜாகீர் நாயக்கிற்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் நன்றாக தெரியும். சோனியா காந்தியே, ஜாகீருக்கு ஆதரவாக இருந்தவர். ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்காக ஜாகீரிடம் இருந்து காந்தி குடும்பம் ரூ.50 லட்சம் நன்கொடையாக பெற்றுள்ளது. ஜாகீரை காப்பாற்ற அனைத்து யுக்திகளையும் காங்கிரஸ் மேற்கொண்டது.

லஷ்கர்-இ-தொய்பாவின் சிலீப்பர் செல்லான இஷ்ரத் ஜகானை, ஒன்றுமறியாத அப்பாவி என சோனியாவுக்காக காங்கிரஸ் தொடர்ந்து கூறி வந்தது. மும்பை குண்டுவெடிப்புக்கு பின்னர் காங்கிரஸ் எந்தவித ஸ்திர நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலகில், ஹபீஸ் சயீத் போன்ற எந்தவொரு பயங்கரவாதியும் ஏதேனும் ஒரு கட்சியை விரும்புகிறார் என்றால் அது காங்கிரஸ் கட்சியாக இருக்கும்.

யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு எதிரான ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்றால், பயங்கரவாதிகளிடம் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் கூட காங்கிரஸ் கட்சி அதனை பற்றி கவலை கொள்ளாது என அவர் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்