< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்டை எதிர்த்து மாநிலங்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு
|11 Aug 2023 11:47 AM IST
ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்டை எதிர்த்து மாநிலங்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்டை எதிர்த்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எழுப்பினார். அத்துடன் மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.