நாகாலாந்து, மேகாலயாவில் நாளை வாக்குப் பதிவு!
|நாகாலாந்து, மேகாலயாவில் நாளை திங்கள் கிழமை (பி.27) ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திரிபுராவில் கடந்த 16 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்தில் நாளை திங்கள்கிழமை (பிப்.27) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. நாகாலாந்து, மேகாலயாவில் சனிக்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டன.
மொத்தம் 120 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து, மேகாலயா பேரவைக்கு மொத்தம் 558 பேர் போட்டியிடுகின்றனர். ஆளும் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. பாஜக, காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
நாகாலாந்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திரிபுரா தேர்தலுடன் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.