< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் இன்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
3 Jan 2024 9:22 AM IST

மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை எதிர்க்கட்சியினர் வகுத்து வருகின்றனர்.

டெல்லி,

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணியின் 3 கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. மேலும் வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக பல்வேறு வியூகங்களை எதிர்க்கட்சியினர் வகுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாரத் நியாய யாத்ரா' ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். மணிப்பூரில் இருந்து மும்பை வரை ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை வரும் 14-ம் தேதி முதல் மார்ச் 20 வரை நடக்கிறது.

மேலும் செய்திகள்