< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க.வை எதிர்க்க மாநில கட்சிகளை காங்கிரஸ் முன்னிறுத்த வேண்டும் - சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்
தேசிய செய்திகள்

'பா.ஜ.க.வை எதிர்க்க மாநில கட்சிகளை காங்கிரஸ் முன்னிறுத்த வேண்டும்' - சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்

தினத்தந்தி
|
25 March 2023 10:41 PM IST

மாநில கட்சிகளை முன்னிலைப்படுத்து காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், லாலு பிரசாத் யாதவின் குடும்பத்திற்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து பாரபட்சமாக நடந்து கொள்வதாக தெரிவித்தார்.

மாநில கட்சிகளை அவமானப்படுத்த தேசிய கட்சிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், முன்ப் காங்கிரஸ் செய்ததை தற்போது பா.ஜ.க. செய்து வருகிறது என்றார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என குறிப்பிட்ட அவர், மாநில கட்சிகளை முன்னிலைப்படுத்து காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு என்றும், அதன் மூலம் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் பா.ஜ.க.வை எதிர்த்து போட்டி போட முடியும் என்றும் கூறினார்.


மேலும் செய்திகள்