< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்: 31-ந்தேதி கூடுகிறது காங்கிரஸ் தேர்தல் கமிட்டி
|29 March 2024 1:57 AM IST
மீதமுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் கமிட்டி 31-ந்தேதி கூடுகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடக்கிறது.
இதில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. அந்தவகையில் 208 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மீதமுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி வருகிற 31-ந்தேதி கூடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், தேர்தல் கமிட்டி உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இந்த கூட்டத்தில் முக்கியமாக டெல்லி மற்றும் மராட்டியத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.