< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காங்கிரஸ் போராட்டம், காந்திக்கு அவமதிப்பு - பா.ஜ.க. காட்டம்
|27 March 2023 3:34 AM IST
காங்கிரஸ் கட்சியின் போராட்டம், காந்திக்கு அவமதிப்பாகும் என்று பா.ஜ.க. காட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ராகுல் காந்தி பதவி பறிப்பைக் கண்டித்து டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிட பகுதியில் காங்கிரசார் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தியது பற்றி பா.ஜ.க. காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி கூறுகையில், "மகாத்மா காந்தி சமூக காரணங்களையொட்டி சத்தியாகிரக போராட்டம் நடத்தினார். காங்கிரசார் தனிப்பட்ட காரணங்களுக்காக சத்தியாகிரக போராட்டம் நடத்தி உள்ளனர். எனவே காங்கிரசாரின் போராட்டம், மகாத்மா காந்திக்கு அவமதிப்பு ஆகும்" என தெரிவித்தார்.