< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்: காங். கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
|22 Oct 2022 11:42 PM IST
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு, நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இமாச்சலபிரதேச தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன.
இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.