< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அதானி விவகாரம்; நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில்தான் உண்மை வெளிவரும்-காங்கிரஸ் வலியுறுத்தல்
|27 April 2023 7:19 AM IST
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில்தான் உண்மை வெளிவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-அதானி மெகா ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். ஆனால், அக்குழுவின் அதிகாரங்கள் குறைவு. பங்குச்சந்தை விதிமீறல் பற்றி மட்டுமே அக்குழு விசாரிக்க முடியும். விசாரணை அமைப்புகள் மீது அதிகாரம் செலுத்த முடியாது.
மேலும், அதானி குழுமத்துக்கு கடன் தருமாறு பாரத ஸ்டேட் வங்கியை பிரதமர் மோடி வற்புறுத்தினாரா என்பது பற்றி அக்குழு விசாரிக்காது. அதானி குழுமத்தில், கணக்கில் காட்டப்படாத ரூ.20 ஆயிரம் கோடி எப்படி வந்தது என்று நிச்சயமாக விசாரிக்காது. எனவே, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கோரியபடி, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் அவசியம். அதில்தான், மறைக்க முடியாத உண்மைகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.