< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட முடியாது - கட்சி மேலிடம் அறிவிப்பு
|1 Sept 2022 1:56 AM IST
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட முடியாது என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களின் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம், மணீஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை கட்சி மேலிடம் நிராகரித்து உள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வாக்களிப்பவர் பட்டியலை வெளியிடும் நடைமுறை காங்கிரசில் இல்லை. பழைய நடைமுறையை தொடர்ந்து பின்பற்றுவோம். இது ஒரு உள் நடைமுறை. இது அனைத்து பொதுமக்களும் பார்க்கும்படி வெளியிடப்படக்கூடாது' என்று தெரிவித்தார்.