< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியின் பேச்சு ஆணவம் மிக்கது: எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பேச்சு ஆணவம் மிக்கது: எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தினத்தந்தி
|
10 Feb 2023 4:02 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தன்னைத்தானே புகழ்ந்து பேசுகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் உரையை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மல்லிகர்ஜூன் கார்கே கூறியதாவது:- 'பிரதமர் நரேந்திர மோடி தன்னைத்தானே புகழ்ந்து பேசுகிறார். இந்த அரசுக்கு எதிராக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. வேலைவாய்ப்பின்மை குறித்தோ, பணவீக்கம் குறித்தோ, அதானி விவகாரம் குறித்தோ பிரதமர் பேசவில்லை.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது குறித்தும் பிற விவகாரங்கள் குறித்தும் பிரமதர் மோடி பேசவில்லை. அவரால் மட்டும்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என பிரதமர் பேசுவது ஆணவம் மிக்கது' என்றார்.

மேலும் செய்திகள்