< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? ராகுல்காந்தி கேள்வி
|20 Sept 2023 6:01 PM IST
ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி,
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் ராகுல்காந்தி எம்.பி., பேசியதாவது:-
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முழுமை பெறாமல் உள்ளது. பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலம் மகளிருக்கு அதிக அதிகாரம் கிடைத்தது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்காதது வருத்தமளிக்கிறது.
ஓபிசி இடஒதுக்கீட்டின் படி நாடாளுமன்றம், சட்டமன்றம் நீதித்துறைகளில் கடைபிடிக்க முடிகிறதா? மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? அதானியின் முறைகேடுகளை மறைக்க பாஜக வெவ்வேறு உத்திகளை கையாள்கிறது. ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது என்றார்.
ராகுல்காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பிக்கள் முழுக்கம் எழுப்பினர்.