எப்போதுமே வெள்ளை டி-சர்ட் அணிந்திருப்பது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்
|பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எப்போதுமே வெள்ளை நிற டி-சர்ட்டை அணிந்து வருகிறார். இதற்கான காரணம் குறித்து அவர் தனது 54வது பிறந்தநாளான நேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
"பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எப்போதும் வெள்ளை நிற டி-சர்ட்டை' நான் ஏன் அணிகிறேன் என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற டி-சர்ட்டுகள் எனக்கு வெளிப்படைத்தன்மை, திடத்தன்மை மற்றும் எளிமையை உணர்த்துகிறது.
உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் வாழ்க்கையில் இந்த வெள்ளை டி-சர்ட்டுக்கான மதிப்பு எங்கே, எப்படி பயனுள்ளதாக இருக்கும்? என்பதை ஒயிட் டி-சர்ட் ஆர்மி (White TshirtArmy) என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வீடியோவில் சொல்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு வெள்ளை டி-சர்ட்டை பரிசாக தருகிறேன்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.