< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காங்கிரஸ் எம்.பி. மரணம்- ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஒருநாள் ஒத்திவைப்பு
|14 Jan 2023 2:22 PM IST
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றிருந்த ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார்.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார். நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.யின் மறைவை தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.