< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் மீது தாக்குதல்
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
24 Jun 2022 6:03 PM IST

கேரளாவின் வயநாடுவில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

வயநாடு,



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வயநாடுவில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதனை அக்கட்சி உறுதி செய்து உள்ளது. இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து உள்ளது. அதில், கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருக்கும்போது, வெளியே இருந்து வந்த சிலர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சி டுவிட்டர் வழியே வெளியிட்ட செய்தியில், இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) அமைப்பின் கொடிகளை ஏந்தியபடி குண்டர்கள் வந்தனர். அவர்கள் ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தின் சுவர் மீது ஏறி, குதித்து உள்ளே வந்தனர். கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.



மேலும் செய்திகள்