< Back
தேசிய செய்திகள்
100 மோடி- அமித்ஷா வந்தாலும் 2024-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி- மல்லிகார்ஜுன் கார்கே
தேசிய செய்திகள்

100 மோடி- அமித்ஷா வந்தாலும் 2024-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி- மல்லிகார்ஜுன் கார்கே

தினத்தந்தி
|
22 Feb 2023 2:30 PM IST

100 மோடி- அமித்ஷா வந்தாலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.

புதுடெல்லி:

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்கும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இதுகுறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்துள்ளார்.

நாகாலாந்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே பேசும்போது கூறியதாவது:-

இந்த நாட்டை காக்கும் ஒரே மனிதர் நான்தான். வேறு யாரும் என்னைத் தொட முடியாது என நரேந்திரமோடி பல முறை கூறி இருக்கிறார். எந்த ஜனநாயக மனிதனும் இதைச் சொல்வதில்லை, நீங்கள் ஜனநாயகத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சர்வாதிகாரி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

2024-ல் மத்தியில் கூட்டணி ஆட்சி வரும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும். மற்ற கட்சி கணாமல் போய்விடும்.

ஒவ்வொரு கட்சியுடனும் இப்போது நாங்கள் பேசி வருகிறோம். நாங்கள் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம். 100 மோடி அல்லது ஷாவை வந்தாலும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது, மற்ற அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து, நாங்கள் பெரும்பான்மை பெறுவோம்.

எங்கள் மக்கள் சுதந்திரம் பெற காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். நீங்கள் அல்ல...! சுதந்திரத்திற்காக பாஜக தலைவர்கள் யாராவது தூக்கிலிடப்பட்டுள்ளார்களா? அல்லது சுதந்திரத்திற்காக போராடியவர்களா? சிறைக்கு சென்றார்களா?

மாறாக, சுதந்திரத்தை பெற்றுதந்த மகாத்மா காந்தியை அவர்கள் கொன்றார்கள், அப்படிப்பட்டவர்கள் தேசபக்தி பேசுகிறார்கள்.

நாட்டின் ஒற்றுமைக்காக, இந்திரா காந்தி தனது உயிரைக் கொடுத்தார். நாட்டின் ஒற்றுமைக்காக, ராஜீவ் காந்தி தனது உயிரைக் கொடுத்தார். அவர்கள் 2014 இல் தான் சுதந்திரம் பெற்றதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு 1947 நினைவில் இல்லை என கூறினார்.

மேலும் செய்திகள்