டெல்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களை சந்தித்து பிரியங்கா காந்தி ஆதரவு
|டெல்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை தொடங்கினர்.
இதற்கிடையே, சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடும்படி, சுப்ரீம் கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தது இதையடுத்து, பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் பொதுசெயலர் பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார்.