ஆஸ்பத்திரியில் இருந்து பிரியங்கா காந்தி டிஸ்சார்ஜ்
|ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பிரியங்கா காந்தி, பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
லக்னோ,
உடல் நீரிழப்பு மற்றும் வயிற்றுத் தொற்று பிரச்சினைகள் காரணமாக பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பிரியங்கா காந்தி, பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக அவரால் யாத்திரையில் இணைய முடியவில்லை. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அவர், "பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தரபிரதேசம் சென்றடைவதற்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
ஆஸ்பத்திரியில் இருந்து பிரியங்கா காந்தி டிஸ்சார்ஜ்ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக இன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதாயிற்று. உடல்நலம் தேறியவுடன் யாத்திரையில் இணைவேன்" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து இன்று ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.