< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினர்.
|30 Jun 2022 9:58 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினர்.
மும்பை,
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்து பேசினர். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அவரை சந்தித்து பேசினர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் நிதின் ராவத் கூறுகையில், " மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் கடந்த 2½ ஆண்டுகளாக நாங்கள் அங்கம் வகித்து உள்ளோம். எனவே மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தோம். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாவிகாஸ் கூட்டணி தொடர்வது குறித்து இதுவரை எதுவும் ஆலோசிக்கவில்லை. " என்றார்.