< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
|15 Sept 2023 1:53 AM IST
நாடாளுமன்ற கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை நடக்கிறது. அதில் முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிறப்பு கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்குமாறு மக்களவை, மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு 3 வரிகள் கொண்ட கொறடா உத்தரவு தனித்தனியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறப்பு கூட்டத்தொடரில் மிக முக்கியமான பிரச்சினைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே, காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை, சபை தொடங்கும் காலை 11 மணி முதல் சபை ஒத்திவைக்கப்படும்வரை தொடர்ந்து சபையிலேயே இருக்க வேண்டும்.
கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும். இதை மிக முக்கியமாக கருத வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.