< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதா பற்றி பேச காங்கிரசாருக்கு எந்த தகுதியும் கிடையாது - பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர்
தேசிய செய்திகள்

பா.ஜனதா பற்றி பேச காங்கிரசாருக்கு எந்த தகுதியும் கிடையாது - பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர்

தினத்தந்தி
|
27 Sept 2022 12:21 AM IST

பா.ஜனதா பற்றி பேச காங்கிரசாருக்கு எந்த தகுதியும் கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவை இணைப்போம் என்று பாதயாத்திரை புறப்பட்டுள்ள ராகுல்காந்தி, அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சியினரை இணைக்க முயற்சிக்கலாம். காங்கிரசை வழிநடத்தும் தகுதி ராகுல்காந்திக்கு இல்லை. தொண்டர்களை ஒருங்கிணைக்கும் சக்தி அவரிடம் இல்லை.

ஊழல் பற்றி பேச காங்கிரசாருக்கு தகுதி இல்லை. பா.ஜனதா பற்றி பேச காங்கிரசாருக்கு எந்த தகுதியும் கிடையாது. பா.ஜனதாவில் இணைந்து மேல்சபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பசவராஜ் ஹொரட்டி ஓரம்கட்டப்படுவதாக கூறுகிறீர்கள். கட்சி மேலிடம் உரிய நேரத்தில் அவருக்கு கவுரவம் கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்