< Back
தேசிய செய்திகள்
காங்கிரசில் தகுதியான தேசிய தலைவா் கூட இல்லை; மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி
தேசிய செய்திகள்

காங்கிரசில் தகுதியான தேசிய தலைவா் கூட இல்லை; மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி

தினத்தந்தி
|
25 Sept 2022 12:15 AM IST

காங்கிரசில் தகுதியான தேசிய தலைவா் கூட இல்லை என்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பாகல்கோட்டையில் மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதா மீது காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றச்சாட்டு கூற தகுதி கிடையாது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடைபெறாமல் இல்லை. அந்த ஊழல்களை மூடிமறைக்கவே பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுகின்றனர். 60 ஆண்டுகாலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் தலைவா்கள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு சிறைக்கு சென்று, ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். சோனியா காந்தியே ஜாமீனில் இருந்து வருகிறார். பல வழக்குகளை எதிர்கொள்கிறார். இப்படிப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூற தததி இல்லை. பா.ஜனதா ஆட்சியில் யார் தவறு செய்தாலும், எந்த தவறு நடந்தாலும் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எந்த துறையாக இருந்தாலும், யாராக இருந்தாலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரசில் தேசிய தலைவரை தேடும் பணி நடக்கிறது. காங்கிரசில் தகுதியான தேசிய தலைவர் கூட இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்