< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குலாம்நபி ஆசாத்துடன், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் சந்திப்பு
|31 Aug 2022 6:00 AM IST
ஆனந்த் சர்மா, பிருதிவிராஜ் சவான், பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோர் டெல்லியில் குலாம்நபி ஆசாத்தை சந்தித்து பேசினர்.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத், கடந்த 26-ந் தேதி காங்கிரசில் இருந்து விலகினார். அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.குலாம்நபி ஆசாத், காங்கிரசில் 23 அதிருப்தி தலைவர்கள் அடங்கிய ஜி-23 குழுவில் செயல்பட்டு வந்தவர்.
இந்தநிலையில், அந்த குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா, பிருதிவிராஜ் சவான், பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோர் நேற்று டெல்லியில் குலாம்நபி ஆசாத்தை சந்தித்து பேசினர். ஆசாத் இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது. ஜி-23 குழுவின் எதிர்கால திட்டம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த குழுவை சேர்ந்த சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட பரிசீலித்து வருகிறார். அதனால் உட்கட்சி தேர்தல் பற்றியும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.