< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது - சந்திரசேகர ராவ்
தேசிய செய்திகள்

'தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது' - சந்திரசேகர ராவ்

தினத்தந்தி
|
1 Nov 2023 2:36 PM IST

காங்கிரஸ் கட்சியில் டஜன் கணக்கில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் உள்ளனர் என சந்திரசேகர ராவ் விமர்சித்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கானா முதல்-மந்திரியும், பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ், ஹூசூர்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சியில் டஜன் கணக்கில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தாங்களே முதல்-மந்திரியாக வர எண்ணி மக்களிடம் வாக்கு கேட்கின்றனர். மக்கள் வெற்றி பெறும் தேர்தலே உண்மையான தேர்தல். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியாது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்