< Back
தேசிய செய்திகள்
இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 60 ஓட்டில் வெற்றி
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 60 ஓட்டில் வெற்றி

தினத்தந்தி
|
9 Dec 2022 5:21 AM IST

காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் குமார், வெறும் 60 ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் அனில் திமனை தோற்கடித்தார்.

சிம்லா,

இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலில் ஹமிர்பூர் மாவட்டம் போரஞ்ச் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் குமார், வெறும் 60 ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் அனில் திமனை தோற்கடித்தார். அதுபோல், குமர்வின் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ரந்திர் சர்மா, 171 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அனைத்து தொகுதிகளிலும் 'நோட்டா'வுக்கு 250 ஓட்டுகளுக்கு மேல் விழுந்தது. இமாச்சலபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை, டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும் செய்திகள்