< Back
தேசிய செய்திகள்
முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கிக்கணக்கு மீண்டும் செயல்பட அனுமதி
தேசிய செய்திகள்

முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கிக்கணக்கு மீண்டும் செயல்பட அனுமதி

தினத்தந்தி
|
16 Feb 2024 1:47 PM IST

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு வருமானவரித்துறையால் முடக்கப்பட்டிருந்தது.

டெல்லி,

வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய 201 கோடி ரூபாய் வரியை காங்கிரஸ் கட்சி செலுத்தாததால் அக்கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரசின் வங்கிக்கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமுடியாத சூழ்நிலை உருவாகும் என்று காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மீண்டும் செயல்பட வருமானவரித்துறை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் வங்கி கணக்குகளை பயன்படுத்த எந்த கட்டுப்பாடும் கிடையாது எனவும் வருமானவரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு வரும் புதன்கிழமை மீண்டும் விசாரிக்கப்படும் என்று வழக்கை தீர்ப்பாயம் ஒத்தி வைத்துள்ளது.

மேலும் செய்திகள்