< Back
தேசிய செய்திகள்
டெல்லி காங்கிரசுக்கு இடைக்கால தலைவர் நியமனம்

Image Courtacy: PTI

தேசிய செய்திகள்

டெல்லி காங்கிரசுக்கு இடைக்கால தலைவர் நியமனம்

தினத்தந்தி
|
1 May 2024 12:21 AM IST

டெல்லி மாநில காங்கிரசுக்கு இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து டெல்லி மாநில காங்கிரசுக்கு இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியின் தேசிய தலைவர் ஒப்புதலோடு நடைபெற்ற இந்த நியமனத்தை பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அறிவித்தார்.

இடைக்கால தலைவர் தேவேந்தர் யாதவ், ஏற்கனவே பஞ்சாப் மாநில பொறுப்பாளராக உள்ளார். அந்த பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார் என்றும் கட்சி அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்