< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவி தூக்கிட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவி தூக்கிட்டு தற்கொலை

தினத்தந்தி
|
21 Jun 2024 5:59 PM IST

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத் சொப்பதண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மெடிபள்ளி சத்யம். இவரது மனைவி ரூபா தேவி. இவர் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் செகந்திராபாத் அல்வாலில் உள்ள பஞ்சசீலா காலனியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு ரூபா தேவி தனது அறையின் கதவை வெகு நேரமாக திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரூபா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரூபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூபாவின் தற்கொலைக்கான காராணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்