< Back
தேசிய செய்திகள்
ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத மர்ம பொருள் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகமா...?
தேசிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத மர்ம பொருள் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகமா...?

தினத்தந்தி
|
31 July 2023 5:46 PM IST

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத பொருள் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம் என உறுதி செய்தது ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கி.மீ. தொலைவிலுள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில வாரங்களுக்கு முன்பு ராட்சத உலோகப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 2.5 மீட்டர் அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள் ஆகும்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய அந்த உலோக பொருள் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து விழுந்திருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ள டுவிட்டில் "மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத பாகம், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரோ இதுகுறித்து இதுவரை எந்தவித விளக்கமும் வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்