< Back
தேசிய செய்திகள்
விமானத்தில் தங்கம் கடத்த உடந்தை; சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் கைது
தேசிய செய்திகள்

விமானத்தில் தங்கம் கடத்த உடந்தை; சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் கைது

தினத்தந்தி
|
16 Jun 2023 6:35 PM GMT

திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் 4.8 கிலோ தங்கம் கடத்தப்பட்டது.

திருவனந்தபுரம்,

அபுதாபியில் இருந்து கடந்த 4-ந்தேதி திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் 4.8 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இதை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அதில் கைதானவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் மறைமுக உதவியுடன் தங்கத்தை கடத்தியதாக கூறினர்.

இதுதொடர்பாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த அனீஷ் முகம்மது (வயது 39), நிதின் (48) ஆகியோர் தங்கம் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் உதவியுடன் 80 கிலோ தங்கம் கடத்தப்பட்டு இருந்ததையும் உறுதி செய்தனர். இதையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குரைக அதிகாரிகள் இன்ஸ்பெக்டர்கள் அனீஷ் முகம்மது, நிதின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்