< Back
தேசிய செய்திகள்
புகார் பெட்டி செய்திகள்
மாவட்ட செய்திகள்
தேசிய செய்திகள்

புகார் பெட்டி செய்திகள்

தினத்தந்தி
|
19 May 2022 9:29 PM IST

பள்ளி அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு


பள்ளி அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

பெங்களூரு டி.சி.பாளையா மாரகொண்டனஹள்ளி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் அருகே உள்ள காலி நிலத்தில் குப்பைகள் வீசப்படுகின்றன. அந்த குப்பைகளை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சரியாக கையாளுவது இல்லை என்று குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதனால் அங்கு குப்பை மலைபோல குவிந்து கிடக்கிறது. கால்நடைகள் குப்பைகளை இழுத்து சாலையில் போட்டு செல்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு குப்பை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முனிரத்னா, டி.சி.பாளையா, பெங்களூரு.

சுத்தமான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 1-வது செக்டாரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் காவிரி நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் சரியான முறையில் செய்யப்படவில்லை. இதனால் ரூ.500 முதல் ரூ.600 வரை கொடுத்து மக்கள் டேங்கர் தண்ணீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அந்த டேங்கர் தண்ணீரும் அசுத்தமாக உள்ளதாக புகார்கள் எழுந்து உள்ளது. இதனால் தங்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

- வினித், எச்.எஸ்.ஆர். லே-அவுட், பெங்களூரு.

மேலும் செய்திகள்