< Back
தேசிய செய்திகள்
காங்கிரசின் பாதயாத்திரைக்கு போட்டி; ராஜஸ்தானில் ஜன ஆக்ரோச யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு
தேசிய செய்திகள்

காங்கிரசின் பாதயாத்திரைக்கு போட்டி; ராஜஸ்தானில் ஜன ஆக்ரோச யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு

தினத்தந்தி
|
23 Nov 2022 10:21 PM IST

காங்கிரசின் பாதயாத்திரைக்கு போட்டியாக ராஜஸ்தானில் ஜன ஆக்ரோச யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.



ஜெய்ப்பூர்,


பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையானது, காஷ்மீர் வரை செல்லும். இந்த பயணம், கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் என தென் மாநிலங்களில் நீடித்து, பின்னர் மராட்டியத்திற்கு சென்றது. அதன்பின்னர் இன்று 77-வது நாளில் மத்திய பிரதேசத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில், காங்கிரசின் பாதயாத்திரைக்கு போட்டியாக ராஜஸ்தானில் ஜன ஆக்ரோச யாத்திரை என்ற பெயரில் யாத்திரை ஒன்றை நடத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர் என பா.ஜ.க. கூறியுள்ளது.

வருகிற டிசம்பர் 2-ந்தேதி முதல் இந்த யாத்திரை துவங்கும். ராஜஸ்தானின் அனைத்து 200 தொகுதிகளிலும் இந்த யாத்திரை நடைபெறும். இதில், ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வது என்று பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் 3 அல்லது 4-ந்தேதி காங்கிரசின் பாதயாத்திரை ராஜஸ்தானை வந்தடையும்.

மேலும் செய்திகள்