< Back
தேசிய செய்திகள்
கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனுக்கள் மீது 6 மாதங்களுக்குள் முடிவு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனுக்கள் மீது 6 மாதங்களுக்குள் முடிவு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
25 May 2022 1:59 AM IST

கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனுக்கள் மீது 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனு ஒன்றை ஒடிசா அரசு நிராகரித்தது விதிகளின்படி செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அதற்கு எதிராக ஒடிசாவைச் சேர்ந்த மல்லய்யா நந்தா சேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், 'கருணை அடிப்படையிலான நியமனங்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், அவை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமே தவிர, மெத்தனப்போக்கில் முடிவெடுக்கக் கூடாது.

கருணை அடிப்படையில் நியமனம் கோரும் மனுக்கள் மீது 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்