< Back
தேசிய செய்திகள்
உ.பி.யில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களின் திறனை வளர்க்க வேண்டும் - யோகி ஆதித்யநாத்
தேசிய செய்திகள்

உ.பி.யில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களின் திறனை வளர்க்க வேண்டும் - யோகி ஆதித்யநாத்

தினத்தந்தி
|
5 March 2023 11:09 AM GMT

உ.பி.யில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டம் சண்டிலா நகரில் தனியார் பெயிண்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பேசிய யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தில் முதலீடு செய்து தங்கள் தொழிற்சாலைகளை தொடங்கும் நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களின் திறன் வளர்க்க திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்க வேண்டும். எதிர்காலத்தில் திறமையான மனிதவளத்தை உறுதி செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முதலீட்டிற்கும் மாநில அரசு பாதுகாப்பு அளிக்கும் என முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நான் உறுதி அளிக்கிறேன். பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி முதலீடுகள் செய்தும் உங்கள் தொழில்வளர்ச்சிக்கு மாநில அரசு பங்களிப்பு அளிக்கும்' என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்