'மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை ஆராய குழு அமைக்கப்படும்' - நிர்மலா சீதாராமன்
|உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
2024-2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்ட அவர், புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
இந்தியாவில் வேகமான மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் மக்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் சவால்களை ஆராய்வதற்காக உயர் அதிகாரம் கொண்ட குழுவை அரசாங்கம் அமைக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதில் மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை கையாள்வதற்கான பரிந்துரைகளை வழங்க இந்த குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதேபோல், தாய் மற்றும் குழந்தை நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் ஒருங்கிணைந்த ஒரு விரிவான திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும், அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.