< Back
தேசிய செய்திகள்
சிறை உள்கட்டமைப்பு குறித்த அறிக்கை அளிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

'சிறை உள்கட்டமைப்பு குறித்த அறிக்கை அளிக்க குழுக்கள் அமைக்க வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
31 Jan 2024 5:24 PM IST

ஒரு வாரத்திற்குள் குழுக்கள் அமைக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள சிறைகளின் நிலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி ஏ.அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நாடு முழுவதும் உள்ள சிறைகளின் உள்கட்டமைப்பு குறித்த அறிக்கை அளிக்க மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த குழுக்கள் ஒரு வாரத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவில் மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் சேவை ஆணையத்தின் செயலர், மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 9-ந்தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



மேலும் செய்திகள்