< Back
தேசிய செய்திகள்
உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர்  ஒரே நாளில் அதிரடி இடமாற்றம்
தேசிய செய்திகள்

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர் ஒரே நாளில் அதிரடி இடமாற்றம்

தினத்தந்தி
|
8 July 2023 12:15 AM IST

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர் ஒரே நாளில் அதிரடி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

உப்பள்ளி,

உப்பள்ளி- தார்வார் மாநகராட்சி கமிஷனராக கோபால கிருஷ்ணா என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனராக இருந்த கோபாலகிருஷ்ணாவை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனால் அந்த இடம் காலியாக இருந்தது. இந்தநிலையில், கடந்த 5-ந் தேதி கர்நாடக அரசு போக்குவரத்து கழக இயக்குனராக பணியாற்றி வந்த பரத் என்பவரை உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனராக நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

அதன்படி பரத் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனராக பதவியேற்று கொண்டார். இந்தநிலையில் பரத், பதவி ஏற்ற ஒரே நாளில் அவரை மீண்டும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது, உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற பரத்தை இடமாற்றம் செய்து ஈஸ்வர் உல்லஹட்டி என்பவரை புதிய கமிஷனராக நியமித்து அரசு உத்தரவிட்டது. ஈஸ்வர் உல்லஹட்டி, பெலகாவியில் மாவட்ட திட்ட அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஈஸ்வர் உல்லஹட்டி தனது பொறுப்பை ஏற்று கொண்டார். இதற்கிடையே அரசியல் காரணங்களுக்காக உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனராக இருந்த பரத் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்