< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் 6½ ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம்
தேசிய செய்திகள்

மைசூருவில் 6½ ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம்

தினத்தந்தி
|
8 Oct 2023 12:15 AM IST

கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்க மைசூருவில் 6½ ஏக்கர் நிலத்தில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என்று மந்திரி சரணபசப்பா தர்ஷன்பூர் தெரிவித்துள்ளார்.

மைசூரு

மந்திரிகள் ஆய்வு

கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தி ெசய்யப்படும் பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்காக மைசூரு நகரில் 'யூனிட்டி மால்' என்ற வணிக வளாகத்தை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மைசூரு தசரா கண்காட்சி வளாகம் அருகே 6½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் புதிய வணிக வளாகம் அமைய உள்ளது.

இந்த இடத்தை நேற்று பொதுப்பணித்துறை மற்றும் சிறு தொழில்துறை மந்திரி சரணபசப்பா தர்ஷன்பூர் மற்றும் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு வர உள்ள வணிக வளாக கட்டிடத்தின் வரைப்படத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மந்திரிகளிடம் காண்பித்தனர். அதனை மந்திரிகள் ஆய்வு செய்தனர்.

மைசூருவுக்கு ெபருமை

இதையடுத்து மந்திரி சரணபசப்பா தர்ஷன்பூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்காக இந்த யூனிட்டி வணிக வளாகத்தை அமைக்க அரசு முடிவு செய்தது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதன்மூலம் மாநிலத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஒரே இடத்தில் வாங்க முடியும். இது மக்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் அனுகூலமாக இருக்கும்.

இது வணிக மையமாக மாற்றப்படும். இந்த கட்டிடத்தை பாரம்பரிய முறையில் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வணிக வளாகம் மைசூரு நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும். இதனை சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்